அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் திருப்பத்தூர்: பாஜகவையும், காங்கிரசையும் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு அழைத்து வந்தவர்கள் திமுக என ஆம்பூரில் நடைப்பெற்ற அதிமுக 52ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பன்னீர் செல்வம் நகர் பகுதியில் அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கே.சி.வீரமணி பேசியதாவது, "அதிமுக உருவாவதற்கு காரணம் எம்.ஜி.ஆர்.
ஆனால், அவருக்கும், ஜெயலலிதாவிற்கும் நிறைய தொந்தரவு அளித்தவர்கள் திமுகவினர். ஜெயலலிதாவை லாரி ஏற்றி கொல்லப் பார்த்தவர்கள். மேலும், காங்கிரஸ் தமிழகத்தில் காலடி வைக்கக் கூடாது என திமுக என்ற கட்சியை தொடங்கியவர் அண்ணா. ஆனால் அண்ணாவின் கொள்கைக்கு மாறாக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.
இதையும் படிங்க:கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: கோவையில் பலத்த சோதனை! மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு!
மேலும், பாஜகவையும், காங்கிரசையும் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு அழைத்து வந்தவர்கள் திமுகவினர். தற்போது அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணியில்லை என பொய் பேசுகிறார்கள் என திமுகவினர் கூறுகிறார்கள். ஏஜென்ட் மூலம் 520 பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர்.
அதிமுக ஆட்சியில் 60 ரூபாயாக இருந்த மதுபானங்களின் விலை தற்போது 150 ரூபாயாக உயர்த்தி, அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். அதையும் சரிவர வழங்காமல் தகுதி பார்த்து வழங்குகிறார்கள். அதிமுக ஆட்சியில் பால் விலையை உயர்த்த கூடாது எனக்கூறி போராட்டம் நடத்திய திமுகவினர் தற்போது 8 முறை பால் விலையை உயர்த்தி உள்ளார்கள்.
மேலும் விலைவாசி, மின்கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளனர். நெருப்பில் பூத்த மலர் அதிமுக. பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளது" என்று முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
இதையும் படிங்க:சேமிப்பை சரியான விதத்தில் முதலீடு செய்துவம் முக்கியம் - முதலமைச்சர் ஸ்டாலினின் உலக சிக்கன நாள் அறிவுரை..!