ஏலகிரி மலைப்பாதையில் காரை ரிவர்ஸ்சில் இயக்கியவரால் பரபரப்பு திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏலகிரி பகுதி ஒரு மலை சுற்றுலா தளம். இந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் தரைப்பகுதியில் இருந்து 14 கொண்ட ஊசி வளைவுகளை கடந்து மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டும்.
இந்நிலையில் இன்று இரவு புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சாரை சாரையாக ஏலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அப்போது ஏலகிரி மலைப்பாதை வளைவுகளில் மேலே ஏறி கொண்டிருந்த வாகனங்களுக்கு எதிராக காரை பின்னோக்கி ஓட்டி வந்த நபரால் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. சாகசம் செய்வதாக நினைத்து ஆபத்தான முறையில் காரை ஓட்டிய நபர் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: New year 2023: 500 வகையான கேக்குகளுடன் களைக்கட்டும் புத்தாண்டு!