தமிழ்நாடு

tamil nadu

9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது

By

Published : May 16, 2022, 5:25 PM IST

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது
9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது

சென்னை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அவரது பெற்றோருடன் ஆந்திரா மாநிலம் சாய் பி நிலையம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடக மாநிலம் கேஆர் புரம் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி சென்னைக்கு தனது வீட்டிற்கு நேற்று (மே15) அதிகாலை திரும்பி கொண்டிருந்தார்‌.

அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்யும்போது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது 9 வயது சிறுமியிடம் அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.

இதனால் பெற்றோர் அதே பெட்டியில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் அந்த முதியவரை பிடித்து காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடம் ஜோலார்பேட்டை அருகே இருப்பதால் அந்த முதியவரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், அவர் சென்னை வடபழனி பூக்கார தெருவை சேர்ந்த சாமுவேல் பெட்ரோமாண்டஸ் (65) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முதியவரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சுங்கச் சாவடியில் திருடிய திருடன்; காட்டிக்கொடுத்த சிசிடிவி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details