கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு திருப்பத்தூர்:வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் சமூக ஆர்வலர் ஐயப்பன் என்பவர் தைப்பூசம் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் இலவசமாக வேட்டி, சேலை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த வருடமும் இலவச வேட்டி சேலை வழங்க டோக்கன் வழங்கப்பட்டது.
இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 12க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள், அரப்பாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி, ஈச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த நாகாம்மாள், சின்னம்மாள் ஆகிய 4 மூதாட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பல்கலைக்கழகத்தில் சுகாதாரமற்ற உணவு வழங்கல்? - மாணவிகள் போராட்டம்