திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவவலின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் கிரிசமுத்திரம் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுனர்.
பாலாற்றில் மணல் கடத்தல்: 3 பேர் கைது - வாணியம்பாடி அருகே மணல் கடத்தல்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாலாற்றில் மூன்று மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய மூவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர் .
Sand
அப்போது பாலாற்றிலிருந்து மூன்று மாட்டு வண்டிகளில் மணல் கடத்திவந்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (35), ஜெயராமன் (27), சாந்தி வீரன் (20) ஆகிய மூவரை கைதுசெய்து, மாட்டு வண்டிகளைப் பறிமுதல்செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.