தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! - தூத்துக்குடி அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்கொலை
தற்கொலை

By

Published : Jul 28, 2021, 4:14 PM IST

தூத்துக்குடி: பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20). கூலி வேலை செய்து வந்த விக்னேஷ், இன்று(ஜூலை28) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வடபாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல!

முதற்கட்ட விசாரணையில், விக்னேஷூக்கு தாய், தந்தை கிடையாது என்பது தெரியவந்தது.

உடன் பிறந்த சகோதரி ஒருவர், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

இதனால் உறவினர்களின் பாதுகாப்பிலேயே விக்னேஷ் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 27) தனது சகோதரியைத் தொடர்பு கொண்ட விக்னேஷ், மன உளைச்சலுடன் இருப்பதால் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.

ஆனால், விக்னேஷ் விளையாடுவதாக எண்ணிய சகோதரி, இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

அதன் பின்னரே விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வடபாகம் காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:தவறி விழுந்து 15 மாத குழந்தை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details