தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது குமரெட்டியாபுரம் கிராமம். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.
கிருமி நாசினி தெளிக்கும் பணி அதனையொட்டி குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் முதல் 60 வயது முதியோர்கள் வரை அனைவரும் ஒரு குழுவாக இணைந்து கரானோ ஒழிப்பு பணியில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
பாரம்பரிய மருத்துவ முறையில் கிருமி நாசினி அதற்காக, விவசாயி நாகராஜ் தலைமையில் தன்னார்வலர்கள் சுப்பையா, நடராஜன், குமார், தென்னவன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் தங்களால் இயன்ற அளவுக்கு பங்களிப்பு செய்து தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைப்படி வேப்பிலை, பப்பாளி இலை, புங்கை இலை சாறு, மஞ்சள் காப்பு, கோமியம் ஆகியவற்றை கலந்து இயற்கை கிருமிநாசினி தயாரித்தனர். அவற்றை டிராக்டர்கள் மூலம் குமரெட்டியாபுரம் கிராமத்திலுள்ள 12 வீதிகளிலும் தெளித்தனர்
மேலும், ஒலிபெருக்கி மூலம் கரோனா ஒழிப்பு விழிப்புணர்வு பாடல்களை ஒலிக்கச் செய்தவாறு கையில் வேப்பிலையுடன் ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க:'டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்' - தமிழ்நாடு அரசு வேண்டுகொள்