தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவப்பட்டி ஆறுமுக முதலியார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் கறிக்கடையில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (32). இவர்களுக்கு முகேஷ் (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர்.
இன்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்த கருப்பசாமியை, அவரது மனைவி முனீஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கருப்பசாமி மனைவி முனீஸ்வரியை அரிவாளால் தலையின் பின்பக்கம், காதுப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.