தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுவிரியன் பாம்பை கையில் தூக்கி வந்த பெண்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவ ஊழியர்கள்! - Thoothukudi news in tamil

தூத்துக்குடியில் தன்னை கடித்த கட்டுவிரியன் பாம்பை கையோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பெண் சிகிச்சை பெற்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

woman-who-carried-the-snake-in-her-hand-dot-dot-dot-the-medical-staff-froze-in-shock
கட்டுவிரியன் பாம்பை கையில் தூக்கி வந்த பெண்...அதிர்ச்சியில் உறைந்த மருத்துவ ஊழியர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 2:28 PM IST

கட்டுவிரியன் பாம்பை கையில் தூக்கி வந்த பெண்...அதிர்ச்சியில் உறைந்த மருத்துவ ஊழியர்கள்

தூத்துக்குடி:முதலூர் அருகே உள்ள ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அழகு ராணி (வயது 35) என்ற பெண் நேற்று மாலை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அருகே உள்ள முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அவர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வந்திருந்தார். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த ஒரு கேரி பேக்கில் தன்னை கடித்த பாம்பு இதுதான் எனக் கூறியவாறு மருத்துவமனை ஊழியர்கள் முன்பு பாம்பை காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான மருத்துவமனை ஊழியர்கள், பாம்பு உயிருடன் இல்லை என்பதை அறிந்து பெருமூச்சு விட்டனர்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் இது எந்த வகையான பாம்பு என்பது குறித்து விசாரணை நடத்தி, பின்னர் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அப்பெண் அழகு ராணி என்பவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:தேசிய போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை!

ABOUT THE AUTHOR

...view details