தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தற்பொழுது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை உள்ளீடு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. அடுத்தாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் கூறுகையில், 'தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,595 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், மூன்று வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் அமைதியான முறையில் தேர்தல் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 700 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.