கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கயத்தார் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அமைச்சரையே மிரட்டியவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்? கடம்பூர் ராஜூ - minister kadampur raju
தூத்துக்குடி: ஆளும் கட்சியில், அமைச்சராக இருப்பவரை மிரட்டியவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
What if those who intimidated the minister come to power? Kadampur Raju questioned
அப்போது, 10 ஆண்டுகாலம் தொகுதியை அமைதிப் பூங்காவாக மாற்றி அனைத்து சாதி மக்களும் ஒருதாய் பிள்ளையாக வாழும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறேன்.
எனது வெற்றியை தட்டிப் பறிக்க பெரிய சதி நடைபெறுகிறது. ஒரு ஆளுங்கட்சி அமைச்சராக இருப்பவரையே மிரட்டி பார்க்க நினைப்பவர்கள், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என நீங்களே நினைத்து பாருங்கள் என்றார்.