தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நீட் தேர்வுக்கு விலக்களிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்' - முதலமைச்சர் - exception

தூத்துக்குடி: "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டாலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும்படி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்" என்று, முதலலைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்

By

Published : Jul 6, 2019, 7:51 PM IST

அமமுக நிர்வாகி இசக்கி சுப்பையா தலைமையில் 10 ஆயிரம் பேர் அக்கட்சியிலிருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் இணையும் நிகழ்ச்சி தென்காசியில் இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அப்பொழுது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஆனால், இன்னும் நிறைவேறவில்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டாலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்

ABOUT THE AUTHOR

...view details