தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் மனு - மனு

தூதுக்குடி: பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் மனு

By

Published : Jul 29, 2019, 7:45 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனு அளிப்பதற்காக அம்மாவட்ட ஜெய்லானி தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் மனு

அப்போது,செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ”தூத்துக்குடி ஜெய்லானி தெருவில் நாங்கள் குடியிருக்கிறோம். எங்களது தெருவிற்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டுவருகிறோம். தனியாரிடம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. எங்களது அருகாமையில் உள்ள தெருக்களுக்கு வரும் தண்ணீர் எங்களுக்கு வரவில்லை.

இது குறித்து நாங்கள் அலுவலர்களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலுவலர்கள் பாகுபாடுடன் தண்ணீர் விநியோகிப்பதாக எங்களுக்கு தோன்றுகிறது. ஆகவே பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details