தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வ.உ.சியின் நினைவுகள் போற்றப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி - kanimozhi mp press meet

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

By

Published : Sep 5, 2021, 2:50 PM IST

தூத்துக்குடி:கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று (செப்.5) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி நினைவு இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தன் வாழ்நாளில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமன்றி தமிழ் மொழிக்காக தமிழ் மொழியின் அடையாளத்திற்காக பாடுபட்டவர் வ.உ.சி. சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

கனிமொழி எம்.பி

தொழிலாளர்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் போராடிய பெரும் தலைவரான வ.உ.சியின் நினைவுகள் போற்றப்பட வேண்டும். அவர் வழியில் இந்த நாட்டின் அடையாளங்களை தமிழ்நாட்டில் நாம் பாதுகாப்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: வ.உ.சி 150ஆவது பிறந்தநாள் - பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details