தூத்துக்குடி:பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழாவிற்கு வரும் குழுவினர் சாதி ரீதியான அடையாளத்துடன் வரக்கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடக்கவிருக்கும் குலசை தசரா திருவிழாவில் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களைக் கண்காணித்து இதனைத் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பணியில் ஈடுபட உள்ளனர்.
தசரா திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை பொறுத்து 600 காவல்துறையினர் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், கூட்டத்தை பொறுத்து 1,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவிருப்பதாகத் தெரிகிறது.
’குலசை தசரா திருவிழாவிற்கு ஜாதி அடையாளத்துடன் வரக்கூடாது’ - அதிரடி எச்சரிக்கை மேலும், தசரா திருவிழாவின் போது, கோயிலுக்கு வேடமணிந்து வரும் குழுவினர் எந்தவித ஜாதிய அடையாளத்துடன் வரக்கூடாது எனவும், தசரா திருவிழாவின் போது முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமான நடனங்கள் நடத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவை கடைபிக்க வேண்டும் என்று தசரா குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, “தசரா திருவிழாவில், கோயிலுக்கு வரக்கூடிய குழுவினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயிலுக்கு வர வேண்டும். மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வந்து செல்ல வேண்டும். அதைபோல் ஜாதிய ரீதி அடையாளத்துடன் வரக்கூடாது” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் - சுரேஷ் கண்ணன்