தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தல்.. கும்பல் தப்பியோடிய காட்சி!

By

Published : Jul 12, 2023, 6:48 PM IST

Updated : Jul 12, 2023, 7:02 PM IST

தூத்துக்குடியில் இருந்து இலங்கை படகு மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கடத்திச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தல்
கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தல்

போதைப்பொருள் கடத்திய கும்பல் தப்பியோடிய காட்சி

தூத்துக்குடி:கஞ்சா, பீடி இலை உள்ளிட்ட போதைப்பொருட்கள், சமையல் மஞ்சள் மற்றும் விவசாய உரங்கள் உள்ளிட்டவை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி, தருவை குளத்தில் இருந்து பீடி இலை கடத்தப்படுவதாக மாநில உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து க்யூ பிரிவு போலீசார் தருவை குளம் கடற்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு இருந்த பீடி இலை கடத்தும் கும்பல் காவல் துறையினரைக் கண்டு பயந்து கடலில் குதித்து தப்பினர்.

அதைத் தொடர்ந்து கடலில் குதித்து தப்பிய கடத்தல்காரர்கள் குறித்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தப்பியோடியது யார்? இந்த மூட்டைகளில் பீடி இலை எவ்வளவு உள்ளது? என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கடந்த 13 நாட்களில் மட்டும் 8 டன் பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட்டு, இலங்கை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:DMK councillor suicide: ராசிபுரத்தில் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!

Last Updated : Jul 12, 2023, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details