தூத்துக்குடி: வெள்ளையர்களை எதிர்த்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள கட்டபொம்மனின் முழு உருவ சிலைக்கு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள் விழா! - வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார்
வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் வட்டாட்சியர் மற்றும் வாரிசுதாரர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 264வது பிறந்தநாள்
தொடர்ந்து கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீரசக்கமாள் சிலைக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசகன் உட்பட பலர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுங்கள் - கடம்பூர் ராஜூ
Last Updated : Jan 3, 2023, 1:50 PM IST