தூத்துக்குடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 17 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 16 வார்டுகளில் திமுக வேட்பாளரும், ஒரே ஒரு வார்டில் அதிமுக வேட்பாளரும் வெற்றிபெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் திமுக வசம் என்றானது. இருப்பினும் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக திமுகவை சேர்ந்த வசுமதி அம்பாசங்கர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக கோவில்மணி என்பவர் தேர்வானார்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு;
1. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் - வசுமதி அம்பாசங்கர்(திமுக), துணைத் தலைவர் கோவில்மணி(திமுக).
2. ஓட்டப்பிடாரம் ஒன்றியத் தலைவர் - ரமேஷ்(திமுக), துணைத் தலைவர் - காசி விஸ்வநாதன்(திமுக)
3. கருங்குளம் ஒன்றியத் தலைவர் - கோமதி(அதிமுக), துணைத் தலைவர் லெட்சுமணப்பெருமாள்(அதிமுக)
4. ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் - ஜனகர்(திமுக), துணைத் தலைவர் - ராசாத்தி(திமுக)
5. விளாத்திகுளம் ஒன்றியத் தலைவர் - முனியசக்தி(அதிமுக), துணைத் தலைவர் - சுப்புலட்சுமி(பாஜக).