தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா... அது அவருக்கே தெரியாது': கலாய்த்த வடிவேலு - ரஜினியின் அரசியல் பிரவேசம்

தூத்துக்குடி: 'நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா, இல்லையா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது' என நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

வடிவேலு
வடிவேலு

By

Published : Mar 13, 2020, 8:16 PM IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' குடும்ப நலன் வேண்டியும் உலக நன்மைக்காகவும் சாமி தரிசனம் செய்தேன். புதிய பட வாய்ப்புகளை கடவுள் தருவார்' என நம்பிக்கைத் தெரிவித்தார் .

இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு,'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா... இல்லையா என்பது அவருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. கட்சிக்குத் தலைமையாக ஒருவரும், ஆட்சிக்கு தலைமையாக ஒருவரும் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

வடிவேலு செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சர் பதவிக்கு ஆசையில்லை என ரஜினி கூறுவது நல்ல விஷயம். மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம். வருகின்ற 2021-ல் நான்தான் தமிழ்நாடு முதலமைச்சர்' என்றார்.

இதையும் படிங்க:

நடிகர் ரஜினியை பற்றி பேச ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details