தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 21 பேரும், திருநெல்வேலி மருத்துவமனையில் ஐந்து பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தனர். தூத்துக்குடி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 18 பேர் அடுத்தடுத்த கட்டங்களில் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதைப்போல திருநெல்வேலி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் நான்கு பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை தற்போது தூத்துக்குடி மருத்துவமனையில் மூன்று பேர், திருநெல்வேலி மருத்துவமனையில் ஒருவர் என தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு பேர் கரோனா தொற்றுக்கு தொடர் சிகிச்சைப் பெற்றுவந்தனர். கரோனாவிலிருந்து மீண்ட இருவர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதித்த பகுதிகளான செய்துங்கநல்லூர், காயல்பட்டினம், ஆத்தூர், பேட்மாநகரம், தூத்துக்குடி போல்டன்புரம், ராமசாமி புரம், தங்கமாள்புரம், கயத்தாறு, பசுவந்தனை ஆகிய ஒன்பது இடங்களும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க... கரோனா: குமரியில் இரண்டு பேர் குணம்!