தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் பாக்கெட்டில் இரண்டு விலை பட்டியல்! - Aavin milk packet

தூத்துக்குடியில் இன்று விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் இரு வேறு விலை பட்டியல் இருந்ததால் வாடிக்கையாளர்கள், வணிகர்கள் குழப்பமடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 24, 2022, 11:06 PM IST

தூத்துக்குடி: ரெட்டியார்பட்டி பகுதியில் தயாரிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, இன்றும் (டிச.24) சாத்தான்குளத்தில் ஆவின் ஹோமோஜனைஸ்டு பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சு நிற கவர் கொண்ட நிறை கொழுப்பு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது.

அதன் முன் பகுதியில் பாலின் விலையானது 30 ரூபாய் எனவும் அதன் பின்பகுதியில் உள்ள விலையில் 25.50 ரூபாய் எனவும் ஒரே பால் பாக்கெட்டில் இரு வேறு விதமான விலையானது அச்சிடப்பட்டுள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் முன்னாள் அச்சிடப்பட்ட விலை உரிய விலையா..? அல்லது பின்னால் அச்சிடப்பட்ட விலை உரிய விலையா..? என தெரியாமல் குழம்பி வருகின்றனர். இது குறித்து ஆவின் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'ஒரு விரல் புரட்சி' வைரலாகும் அரசு பள்ளி மாணவி பாடல்!

ABOUT THE AUTHOR

...view details