தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 5 மணி முதல் அமலுக்கு வந்தன.
மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம்; விவசாயிகள் கைது! - thoothukudi
தூத்துக்குடி: கோவில்பட்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற பாரதிய கிசான் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, அரசு சார்பில் புதிதாக எந்த ஒரு திட்டமும் தொடங்கப்படக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக எந்த ஒரு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபடவோ, கோஷங்கள் எழுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பாரதிய கிசான் சங்கத்தினர் மறியலில் போராட்டத்தில் ஈடுபட போவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் வந்தது.
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு மறியலில் ஈடுபடத் தயாராக இருந்த விவசாய சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பாரதிய கிசான் சங்கத்தினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.