தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் விளாத்திகுளம் - அருப்புக்கோட்டை சாலையில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணியிடம் ரூ. 31 லட்சம் பறிமுதல் - sezied
தூத்துக்குடி: அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 31 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ரூ. 31 லட்சம் பறிமுதல்
அப்போது, சென்மை ரெட்டிப்பட்டியில் இருந்து வந்த அரசுப் பேருந்தை வழிமறித்து சோதனை செய்தபோது பயணி ஒருவர் ரூ. 31 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது விளாத்திகுளத்தை சேர்ந்த ராம்ராஜ் என்பதும், சொந்த தேவைக்காக பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.