தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைத்திடவே மருத்துவ காப்பீடு திட்டம்' - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி: ஏழை, எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் கிடைத்திடவேண்டி மருத்துவ காப்பீடு செயல்படுத்தப்பட்டுவருகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

By

Published : Sep 23, 2019, 9:47 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ’தமிழ்நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் கிடைத்திடவேண்டி மருத்துவ காப்பீடு செயல்படுத்தப்பட்டுவருகிறது. இக்காப்பீட்டு திட்டத்தின் மூலம், இந்தாண்டு மட்டும் 5000க்கும் மேற்பட்டோர் பலனடைந்துள்ளனர். இம்மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 83000க்கும் மேற்பட்டோருக்கு ரூ.141 கோடி காப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களின் கலைநிகழ்ச்சி, கருத்தரங்கம் நடைபெறும் என்றார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த 11 பயனாளிகளுக்கு அவர் பொன்னாடை போர்த்தி காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details