17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் போட்டியிட்டனர். ஆளுமை மிகுந்த இரண்டு பெண்கள் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டது மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டது முதலே திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகித்தார். பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டார்.
இந்நிலையில், நான்கு லட்சத்து 60 ஆயிரத்து 914 வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். தமிழிசை பெற்ற மொத்த வாக்குகள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 405 வாக்குகள் ஆகும். கனிமொழி இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 653 வாக்குகள் முன்னிலை பெற்று தமிழிசையை தோற்கடித்துள்ளார். கனிமொழியின் வாக்குகள் விழுக்காடு 56.85, தமிழிசை 21.99 விழுக்காடு ஆகும்.
தேர்தலில் வெற்றி தோல்விகள் வருவது சகஜம். முதல்முறையாக தேர்தல் களத்தில் வெற்றிபெற்றிருக்கும் கனிமொழியை தூத்துக்குடி தொகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.