தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 விழுக்காடு வாக்குப்பதிவு வலியுறுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு - தூத்துக்குடி

தூத்துக்குடி: 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற ஸ்கேட்டிங் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.

ஸ்கேட்டிங் விழிப்புணர்வு

By

Published : Mar 17, 2019, 9:26 AM IST

மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து பூங்கா அருகே நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இடையேயான தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி, வி.வி.பேட் இயந்திரம் செயல்பாடு குறித்த விளக்க நிகழ்ச்சி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் படிவம்-6 ஐ பூர்த்திசெய்து வெளியூரில் தாங்கள் வசிக்கும் இடத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தால் அவர்களுக்கு அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

எனவே 100 விழுக்காடு வாக்களிக்கும் விதமாக இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details