தூத்துக்குடி:திருச்செந்தூரில் கடந்த 2011ம் ஆண்டு திமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அப்பொழுது திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகநேரி நகர, திமுக செயலாளர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த 2011 மார்ச் மற்றும் மே மாதங்களில் திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் பெட்ரோல் குண்டு வீச்சி, கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. இந்தக் கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக மூன்று பிரிவுகளில் அமைச்சர் அனிதாகிருஷ்ணன் 4-வது நபராக சேர்க்கப்பட்டார்.