தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், மக்காச்சோள பயிர்களில் பால் வார்மி புழுக்களால் பயிர் தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 44 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.33 கோடி இழப்பீடு - மாவட்ட ஆட்சியர் - மக்கச்சோளம் விவசாயிகள்
தூத்துக்குடி: பால் வார்மி புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.33.08 கோடி இழப்பீடு வழங்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதியளித்துள்ளார்.
இதைதொடர்ந்து பயிர் இழப்பீடு கேட்டு விவசாயிகள் விண்ணப்பித்திருந்தனர். இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்டங்களில் பயிர் இழப்பீடு தொகையாக ரூ.186 கோடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.33 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மூலம் 40 ஆயிரத்து 373 விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் தற்போது விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.