தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ள நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு கேட்டு பரப்புரைமேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நாளை முடிவுபெறும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட திமுக மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி இன்று வேட்புமனுதாக்கல் செய்யவிருக்கிறார்.இதேபோல் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் ஜெயக்குமாரும் இன்று வேட்புமனுதாக்கல் செய்கிறார்.