வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் பாலசூருக்கு நேர் கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
வங்கக் கடல் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை ! - chennai
நாகப்பட்டினம் : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை, தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
இதை முன்னிட்டு, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தம் வலுவடைந்து, ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக வங்கக் கடலில் கடல் காற்று வேகமாக வீசும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.