துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா - வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை, அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.
இதில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு திறந்துவைத்தனர். தொடர்ந்து வானரமுட்டியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள், 794 பயனாளிகளுக்கு ஐந்து கோடியே 93 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.