தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலி-திருச்செந்தூர் புதிய மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் ஆய்வு - thoothukudi news

திருநெல்வேலி-திருச்செந்தூர் புதிய மின்மயமான ரயில் பாதையில், மின் பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதிய மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ஆய்வு
புதிய மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ஆய்வு

By

Published : Dec 19, 2022, 10:15 PM IST

தூத்துக்குடி:திருநெல்வேலி-திருச்செந்தூர் அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதற்காக இந்த ரயில்பாதையில் ஆறுமுகநேரியில் ஒரு துணை மின் நிலையமும், பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் ஆகியப் பகுதிகளில் 4 உபமின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு துணை மற்றும் உபமின் நிலையங்களில் இருந்து 25 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மூலம் இந்த மின்சார ரயில்சேவை தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த புதிய மின்மய ரயில் பாதையை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா ஆய்வு செய்ய வருகை தந்தார்.

முன்பக்கத்தில் டீசல் இன்ஜினையும், பின் பக்கத்தில் மின்சார இன்ஜினையும் பொருத்திய 6 பெட்டிகள் கொண்ட ரயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்தது. இதில் ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உடன் வந்தனர்.

பின்னர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ரயில்வே பாலத்தில் பாலத்தின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலைய பகுதி, நாசரேத் உபமின் நிலையம், ஆறுமுகநேரி ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 61 இடங்களில் புதிதாக வாடகை அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் முத்துசாமி

ABOUT THE AUTHOR

...view details