தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டணம் திடீர் உயர்வு - அதிர்ச்சியில் பக்தர்கள்! - திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசன கட்டணம் உயர்வு

Tiruchendur Subramania Swamy Temple Darshan Ticket Price: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசன கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 9:57 AM IST

தூத்துக்குடி:உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தரிசன கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கோயிலில் சாதாரண நாட்களில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என இருவழிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் சிறப்பு தரிசன கட்டணமாக 100 ரூபாய் மட்டும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், அதிகாலையில் விஸ்வரூப தரிசன கட்டணமாக 100 ரூபாய் பெறப்படுகிறது. மேலும், அபிஷேக கட்டணமாக 500 ரூபாய், விஷேச நாட்களில் 2 ஆயிரம் ரூபாய் என வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் (நவ.13) யாகசாலையுடன் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தரிசன கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூபாய் 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசனக் கட்டணம் ரூபாய் 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சாதாரண நாளில் ரூபாய் 500 ஆகவும், விஷேச நாளில் ரூபாய் 2 ஆயிரமாக இருந்த அபிஷேக தரிசனக் கட்டணம், தற்போது ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

100 ரூபாயாக இருந்த சிறப்பு தரிசனக் கட்டணம் தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நிர்ணயித்த சிறப்பு தரிசனக் கட்டணத்தை திடீரென உயர்த்தியது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, கோயில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கும் 5 ரூபாய் நுழைவுக் கட்டணத்தில் இருந்து 50 ரூபாய் என உயர்த்தி உள்ளது.

இதனால் கடந்த ஒரு மாதமாக திருச்செந்தூர் கோயில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் அரசுப் பேருந்துகள் செல்வதில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்கு நடந்து செல்கின்றனர்.

எனவே, இந்த பிரச்னையில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பக்தர்கள் வசதிக்காக, திருச்செந்தூர் கோயில் நிர்வாகம், அரசுப் பேருந்துகளை திருச்செந்தூர் கோயில் கடற்கரை பேருந்து நிலையத்திற்குள் கட்டணம் இல்லாது அனுமதிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் திருப்பதி போல திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல கட்டணமில்லா வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details