ஒரே மாதத்தில் திருச்செந்தூர் கோயில் உண்டியலில் 2 கோடி காணிக்கை தூத்துக்குடி:உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 11 நாளில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினர், மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதில் ரூ.2 கோடியே 48 லட்சத்து 65 ஆயிரத்து 869 ரூ காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் 1 கிலோ 168 கிராம் தங்கமும், 17, கிலோ 300 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், 491 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Palani murugan temple: குடமுழுக்கு விழாவில் பங்கேற்க குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு!