தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காவல் துறையினர் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தூத்துக்குடியில் ஒரேநாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி: குண்டர் சட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
goondas act
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச் 2) ஒரேநாளில் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். இந்தாண்டு ஜனவரி 1 முதல் இன்றுவரை போக்சோ வழக்குகளில் 7 பேர், கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் - விற்பனையில் ஈடுபட்ட 4 பேர், மணல் திருட்டு வழக்கில் ஒருவர் உள்பட மொத்தம் 35 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.