தூத்துக்குடி:சுற்றுவட்டார கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா, பீடி இலைகள், விரலி மஞ்சள், கடல் அட்டை, உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தி வருவதாகப் புகார்கள் எழுவதால், அதனைக் கண்காணிக்கவும் கடத்தல்களை தடுக்கவும் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் மற்றும் க்யூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மாத்திரைகள் பறிமுதல்... 3 பேர் கைது - Pills worth 35 lakh seized
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மாத்திரைகளைப் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மாத்திரைகள் பறிமுதல்...3 பேர் கைது
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 35 லட்சம் மதிப்பிலான மருந்து மற்றும் மாத்திரைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறுமுகநேரி பகுதியை ஜெயபாரதி ராஜா, ஜெய பார்த்தசாரதி, சங்கரலிங்கம், ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 36 பேர் கைது