தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இது ஸ்வீட் இல்லை ஸ்வீட் மாதிரி.. தூத்துக்குடி பெண்ணின் அல்வா, குளோப் ஜாம் மெழுகுவர்த்திகள்.. தீபாவளி சிறப்புத் தொகுப்பு! - different shapes of candles

diwali special candles in sweet shapes: தீபாவளி பண்டிகையை எப்படி தனித்துவமாக கொண்டாடப் போகிறோம் என மக்கள் யோசித்து வரும் நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த பட்டதாரி பெண் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு புதிய ஐடியாவுடன் களமிறங்கியுள்ளார்..

இனிப்பு வடிவில் மெழுகுவர்த்திகள்
இனிப்பு வடிவில் மெழுகுவர்த்திகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 9:32 PM IST

தூத்துக்குடி

தூத்துக்குடி: பொதுவாகத் தீபாவளி பண்டிகையின் போது நம் உறவினர்களுக்கும், அண்டை வீட்டார்களுக்கும் நம் வீட்டில் செய்யப்பட்ட பலகாரங்களையும், இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் அனைவரது வீடுகளிலும் தீபாவளியன்று நம் வீட்டில் செய்த பலகாரங்கள் மட்டுமல்லாமல், வேலை இடங்களில் கொடுக்கப்பட்டது, உறவினர்கள் பகிர்ந்து கொண்டது என வீடு முழுக்க இனிப்புகளும் பலகாரங்களும் நிரம்பி இருக்கும்.

வீடு முழுக்க இனிப்பு கொட்டிக் கிடப்பதைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆசை வராது. இதனால் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் வயதானவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்று ஒரு நாள் தானே என கூறி இருக்கும் இனிப்புகள் அனைத்தையும் மாயமாக்கி விடுவார்கள்.

இதனால் உடல் ஏற்படும் பிரச்னைகள் பண்டிகை காலங்களை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாமல் செய்து விடுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் இனி நீங்கள் இனிப்பு டப்பாவுக்குப் பதிலாக இனிப்பு மெழுகுவத்தி கொடுக்கலாமே என அறிமுகப்படுத்தியுள்ளார் தூத்துக்குடி மாநகரில் உள்ள தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த பட்டதாரி பெண் கீர்த்திகா.

2021ல் இருந்து தன் வீட்டில் வைத்து அகல் விளக்குகளில் மெழுகுவர்த்திகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், தற்போது வித்தியாசமான முறையில் இனிப்புகள் போன்று மெழுகுவத்தி செய்து அசத்தி வருகிறார். பொதுவாக, நாம் மண் விளக்கு, அகல் விளக்கு, பீங்கான் விளக்குகளைத் தான் பார்த்திருப்போம். ஆனால் கீர்த்திகா ஒரு புது முயற்சியாக நம் இந்தியாவில் பிரபலமாக உள்ள இனிப்புகள் போன்று மெலுவர்த்திகள் செய்து வருகிறார்.

முந்திரி அல்வா, திருநெல்வேலி அல்வா, சூரிய கலா, சந்திர கலா (தஞ்சாவூர் பகுதியில் சிறப்பு வாய்ந்தது) காஜு கத்லி (வட மாநிலத்தில் சிறப்பு வாய்ந்தது) மற்றும் முறுக்கு, சோன்பப்டி, குளோப் ஜாமுன் வடிவில் மெழுகுவத்திகள் செய்து அசத்தி வருகிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல இந்த புதுவித மெழுகுவத்தியைப் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊரும், ஆனால் அதை எடுத்துச் சுவைக்க முடியாது. அவ்வளவு அழகாக ஸ்விட் போன்றே தத்ரூபமாகச் செய்துள்ளார் இவர்.

இதையும் படிங்க: தீபாவளிக்காக வீட்டிலேயே பலகாரம் செய்கிறீர்களா? - அப்போ இதை கண்டிப்பா பாருங்க!

பொதுவாக, கச்சா எண்ணெயிலிருந்தும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களிலிருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளிலிருந்தும் சுத்திகரித்து எடுக்கப்பட்டு தயார் செய்வது தான் இந்த மெழுகுவத்திகள். ஆனால் இவர் மாறாக சோயா பீன்ஸ் மற்றும் தேனிலிருந்து எடுக்கப்பட்ட திரவத்தைக் கொண்டு செய்து வருகிறார்.

லட்டு போன்று வடிவில் உள்ள மெழுகுவத்தி 100 ரூபாயும், மொத்தமாக வாங்கினால் 75 ரூபாய் வரையும் விற்பனை செய்கிறார். ஒவ்வொரு இனிப்புகள் போன்ற மெழுகுவர்த்திகளுக்கும் ஒவ்வொரு விதமான விலையில் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து, மெழுகுவத்தி தொழில் செய்யும் கீர்த்திகாவிடம் கேட்கையில், “பொதுவாக வீட்டில் பொறுத்த கூடிய வகையில் இல்லாமல் வித்தியாசமான இனிப்பு வடிவில் மெலுவர்த்திகள் செய்து வருகிறேன். தீபாவளிக்கு பொதுவாக ஸ்வீட்ஸ்கள், முறுக்கு வகைகள் செய்வோம், நான் அதே போன்று விளக்குகள் செய்து வருகிறேன்.

அல்வா, சூரிய கலா சந்திர கலா போன்ற மெழுகுவத்திகள் சோன்பப்டி, போன்றவை தீபாவளிக்காகத் தயார் செய்து வருகிறேன். அல்வா, சூரிய கலா சந்திர கலா போன்ற மெழுகுவத்திகள் சோன்பப்டி, போன்றவை தீபாவளிக்காகத் தயார் செய்து வருகிறேன். இதன் விலை 500 ரூபாய்.. மேலும், 25 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரைக்கும் மெழுகுவத்திகள் உள்ளது”.

ஆன்லைன் மற்றும் வட்டார கடைகளில் விற்பனை செய்து வருவதாகக் கூறிய அவர் இந்த மெழுகுவத்திகள் பிற மெழுகுவத்திகள் போல் இல்லாமல் அதிக நேரம் எரியக் கூடியதாகவும், எரியும் போது வீட்டிற்குள் புகையும் வராமலும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: செயற்கை நிறமூட்டியா?... உஷார் மக்களே... அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும்!

ABOUT THE AUTHOR

...view details