தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள மீளவிட்டான், மடத்தூர், புதூர் பாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, சாமிநத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து மனு அளித்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ஆலை எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வந்தது. குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை வழங்கியது. கைத்தொழில் திறன் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தியது.
போலி போராளிகளால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - கிராம மக்கள் மனு! பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விளையாட்டில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் எங்களது கிராமத்திற்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணி போன்றவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வந்தது. இப்படி சிறப்பாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம், சில போலி போராளிகளால் பொதுமக்களை மூளைச்சலவை செய்து போராட்ட எண்ணத்தை உருவாக்கியதால், இந்த ஆலை மூடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆலை மூடப்பட்டதன் காரணமாக, பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நேரடியாக வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி - ஆந்திராவைச் சேர்ந்த பெண் கைது