தூத்துக்குடி: மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி உரிமம் இன்றி இயங்கி வரும் 68 டாஸ்மாக் மதுபான கூடங்களை அகற்ற கோரி தெற்கு மாவட்ட பாஜகவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகை இடப் போவதாகவும் எச்சரித்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கி வரும் மதுபான கூடங்களின் எண்ணிக்கை குறித்து டாஸ்மாக் மேளாளரிடம் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கங்களைக் கேட்டிருந்தார். இதற்கான விளக்கங்கள் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் 74 கடைகளுக்கு மட்டுமே பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 68 கடைகள் பார் இல்லாத கடைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 68 கடைகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவுடன் பார் நடத்தப்பட்டு வருவதாக பாஜகவினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜிடம் மனு அளித்தனர். அவர்களது மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 68 மதுபான கூடங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.