தூத்துக்குடி: மாண்டஸ் புயல் (Mandous Cyclone) காரணமாக, கடந்த ஐந்து நாட்களாக தூத்துக்குடி, வேம்பார், புன்ன காயல், தருவைகுளம், ஆலந்தலை, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் இன்று (டிச.12) கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
கரையை கடந்த மாண்டஸ்: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர்கள்
மாண்டஸ் புயல் (Mandous Cyclone) காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த, தூத்துக்குடி மீனவர்கள் இன்று புயலின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
Etv Bharat
முன்னதாக, புயலின் காரணமாக கடலுக்குள் செல்லாத மீனவர்கள் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். இதேபோன்று மாவட்டததின் பிற பகுதிகளிலும் உள்ள நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இதையும் படிங்க: சத்துணவில் அழுகிய முட்டை என அண்ணாமலை புகார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!