தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.7 லட்சம் பறிமுதல், 9 வழக்குகள் பதிவு

தூத்துக்குடி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக ரூ.7 லட்சம் பறிமுதல் மற்றும் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

By

Published : Mar 15, 2019, 2:50 PM IST


நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி காவல்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது.

தேர்தல் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி

இந்த பேரணி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியபடி பேரணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, "இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படையினரும், சிறப்பு கண்காணிப்பு குழுவினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன", என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் மாணவ- மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details