தூத்துக்குடிமாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சாரு ஸ் இன்று (டிச.6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 80 சதவிகிதம் முடிவு பெற்று விட்டது. மார்ச் 23ஆம் தேதிக்குள் முழுமையாக பணிகள் முடிவு பெற்று விடும்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் சென்ற ஆண்டு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு, அரசு ரூ.45 கோடி பணம் ஒதுக்கியுள்ளது. வடிகால் பணிகள் வேலை நடைபெற்று வருகிறது. இப்பணி 2 மாதத்திற்குள் முடிவு பெரும். பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.200 கோடி அரசிடம் இருந்து வரும் பட்சத்தில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி மூலம் பாதிக்கு மேல் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறிந்து வடிகால் வசதி அமைத்து விட்டோம். தாழ்வான பகுதியில் மழை நீரை வாகனம் மூலம் எடுத்து வருகிறோம். மக்கள் சமூக வலைதளத்தில் அவர்கள் பகுதியில் மழைநீர் உள்ளதாக பதிவு செய்து வருகிறார்கள்; அதனடிப்படையில் நீரை எடுத்து வருகிறோம்.