தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளை பகுதியைச் சேர்ந்த ராபர்ட் என்வருக்கு சொந்தமான தோட்டத்தில் 300 தென்னை மரங்கள் உள்ளன.
சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் திடீர் தீ விபத்து - தென்னை மரங்கள் கருகின! - சாத்தான்குளம் தீ விபத்து
தூத்துக்குடி: கலுங்குவிளைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை மரங்கள் தீக்கிரையானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
trees
இந்நிலையில், நேற்று மாலை திடீரென இவரது தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 மரங்கள் தீயில் கருகின. உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் இந்த சம்பவம் தீவிபத்தா? அல்லது அடையாளம் தெரியாத நபர்கள் யாரும் தீ வைத்தார்களா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க:கன்னியாகுமரியில் உணவகத்தில் தீ விபத்து!