தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்கிள் ஓடையில் அமலைச் செடிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை!

மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பக்கிள் ஓடையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், அமலைச் செடிகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

thoothukudi-buckle-remove-the-plastic-wastes-and-amalai-plants-public-demand
அமலைச் செடிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

By

Published : Jun 23, 2023, 1:21 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை செல்கிறது. இது ஆங்கிலேயர் காலத்தில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து உபரிநீர் கடலுக்கு செல்வதற்காக பக்கிள் துரை என்ற ஆங்கிலேய அதிகாரியால் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, காலப்போக்கில் இந்த பக்கிள் ஓடை சாக்கடை கால்வாயாக மாறியது.

தூத்துக்குடியின் கூவம் என்று அழைக்கப்படும் பக்கிள் ஓடையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடுத்து அகற்றப்பட்டது. அப்போது பார்வையிட வந்த அப்போதைய உள்ளாட்சி அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கிள் ஓடையை சீரமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பக்கிள் ஓடை திரேஸ்புரம் கடற்கரை முதல் 3ஆம் மைல் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக உபரி நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட இந்த ஓடை தற்போது நகரின் மொத்த கழிவுகளை சுமந்து கொண்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது.

பக்கிள் ஓடையில் கழிவு நீர் மட்டுமல்ல அனைத்து கழிவுகளும் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள், தங்களது மீன்பிடி படகினை கடலுக்குள் கொண்டு செல்ல வேண்டுமானால் இந்த கழிவுகளில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தின்போது தேங்கும் கழிவுகள் அகற்றப்படுவதும், மீண்டும் கழிவுகள் சேர்வதும் அகற்றப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது.

இந்த நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பக்கிள் ஓடையில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் அமலைச் செடிகளையும் அகற்றவும், மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பக்கிள் ஓடை 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சீரமைக்கப்பட உள்ளது. மேலும், தூத்துக்குடி மாநகராட்சியின் 3வது மைல் பகுதியில் தொடங்கி திரேஸ்புரம் வரையிலான 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்களில் ஓடையின் இருபுறமும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதனால் நகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும் என கூறும் பொதுமக்கள், இப்பகுதியில் சாலையோரங்களில் மின் விளக்குகள் அமைப்பதையும் மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து உள்ளனர்.

இதையும் படிங்க:டிஜிட்டல் முறையில் பெருகும் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீடிக்கும் சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details