தூத்துக்குடியில் கோவில்பட்டி அருகே ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகளை கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று தெற்கு புதுகிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (63) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரனை கைதுசெய்தார். தொடர்ந்து, பரமேஸ்வரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொள்ள கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.