தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2020, 6:36 AM IST

ETV Bharat / state

ஒரு டன் எடையுள்ள கடல் அட்டைகள் பறிமுதல்: 3 பேர் கைது!

தூத்துக்குடி: மன்னார் வளைகுடா அருகே கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

police
police

தூத்துக்குடி துறைமுக தங்குதளத்தில் இருந்து கடல் ரோந்து செல்லும் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் 'அபினவ்'. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது நடுக்கடலில் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு எண் இல்லாமல் சென்ற இந்திய மீன்பிடி படகு ஒன்றை, கடலோர காவல் படையினர் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், அந்தப் படகு தனுஷ்கோடி பகுதியிலிருந்து சட்டவிரோதமாக ஒரு டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடல் அட்டைகள் சர்வதேச சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது.

கடத்தலில் ஈடுபட்டவர்கள்
இதனையடுத்து கடல்அட்டைக் கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியைச் சேர்ந்த எட்வர்டு என்ற பிரான்சிஸ் (வயது 50), சதக் அப்துல்லா(45), ஜெகதீஷ் (45) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பிடிபட்ட படகு செய்யதுகாசிம் (55) என்பவருக்குச் சொந்தமானது என்பதும்; பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதை வழக்கமான தொழிலாக கொண்டு செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்!

ABOUT THE AUTHOR

...view details