தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளை துன்புறுத்தி காணொலி வெளியிட்ட இருவர் கைது - முழுப்பின்னணி - The youngsters who harassed the transgender woman

தூத்துக்குடி அருகே இரு திருநங்கைகளைத் துன்புறுத்தி காணொலி வெளியிட்ட இரு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநங்கைகளை துன்புறுத்தி காணொலி வெளியிட்ட இருவர் கைது...!
திருநங்கைகளை துன்புறுத்தி காணொலி வெளியிட்ட இருவர் கைது...!

By

Published : Oct 13, 2022, 12:48 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை காட்டுப்பகுதியில் திருநங்கைகள் அனன்யா, மகேஷ் இருவரையும் இரு இளைஞர்கள் முடியை அறுத்து தாக்குல் நடத்திய வீடியோ வைரலானது. இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதனடிப்படையில், இன்று(அக்.13) காலை மதுரையிலும், கோவில்பட்டியிலும் பதுங்கி இருந்த திருநங்கைகளைத் தாக்கிய நோவாபூபன், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கழுகுமலை துலுக்கர்பட்டியைச் சேர்ந்த திருநங்கை மகேஷ், இவருடைய தோழி தென்காசி மாவட்டம் கே.ஆலங்குளத்தினை சேர்ந்த அனன்யா. இருவரும் திருநங்கைகள்.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7ஆம் தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியைச்சேர்ந்த நோவாபூபன் மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகளை கடத்திச்சென்று கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுபகுதியில் வைத்து தாக்கியுள்ளனர்.

மேலும் அனன்யாவின் முடியை அறுத்துள்ளனர். அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று நோவாபூபன், விஜய் கூறியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்துள்ளனர்.

மேலும், நோவாபூபன், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்கக்கூடாது என்று திருநங்கைகளை அரிவாளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 2 திருநங்கைகளும் அங்கிருந்து யாரிடமும் சொல்லமால் சென்றதாகத் தெரிகிறது. இந்த நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை சமூக செயற்பாட்டாளர் கிரேஸ்பானு என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்தனர்.

நோவாபூபன், விஜய் இருவர் மீதும் கழுகுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது மட்டுமின்றி 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த இருவரில் ஒருவரை கோவில்பட்டியிலும், மற்றொருவரை மதுரையிலும் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநங்கைகளை துன்புறுத்தி காணொலி வெளியிட்ட இருவர் கைது - முழுப்பின்னணி

இத்கையும் படிங்க: திருநங்கைகளை இளைஞர்கள் துன்புறுத்தும் காணொலி; குற்றவாளிகள் கைது

ABOUT THE AUTHOR

...view details