தூத்துக்குடி:தூத்துக்குடியில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி அய்யனடைப்பு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 20) கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளரிடம் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் குற்றஞ்சாட்டிவந்தனர். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள், கழிவுநீர் ஆகியவை மறுசுழற்சி செய்து மீண்டும் ஆலையின் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதை 'உண்மை சம்பவம்' என்ற புத்தகத்தின் மூலமாக நாங்கள் படித்துத் தெரிந்துகொண்டோம்.