தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகறியில் உப்பு அதிகம்; மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஹோட்டல் மேலாளர் - thiruchendur

வடகறிக்கு உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயினை ஊற்றிய ஹோட்டல் மேலாளர் மீது காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

வடகறியில் உப்பு அதிகம் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய ஹோட்டல் மேலாளர்
வடகறியில் உப்பு அதிகம் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய ஹோட்டல் மேலாளர்

By

Published : Apr 28, 2022, 10:21 PM IST

திருச்செந்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் வெள்ளையன்(56). இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இதே ஹோட்டலில் திருச்செந்தூர் பி.டிஆர்.நகரைச் சேர்ந்த ஐயப்பன் மகன் பாலமுருகன் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை வெள்ளையன் சமையல் அறையில், சமையல் செய்து கொண்டு இருந்த போது அங்கு வந்த மேனேஜர் பாலமுருகன் வடகறியை சாப்பிட்டுவிட்டு உப்பு அதிகமாக உள்ளதாக வெள்ளையனிடம் கேட்டுள்ளார். அதற்கு வெள்ளையன், ’நான் இப்பதான் டேஸ்ட் பண்ணி பார்த்தேன். உப்பு சரியாகத்தானே உள்ளது’ என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலாளர் பாலமுருகன், மாஸ்டர் வெள்ளையனை ‘என்னையே எதிர்த்து பேசுகிறாயா’ என்று கூறி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெயை ஒரு சில்வர் கப்பில் எடுத்து வெள்ளையன் மீது ஊற்றியுள்ளார். இதனால் வெள்ளையனுக்கு முகம், தலை, வலது தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ’இனிமேல் உன்னை ஹோட்டல் பக்கம் பார்த்தால் எண்ணெய் சட்டிகுள் முக்கி கொன்றுவிடுவேன்’ என்றும் வெள்ளையனை பாலமுருகன் மிரட்டியுள்ளார்.

காயமடைந்த வெள்ளையன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளையன் கொடுத்தப்புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகறியில் உப்பு அதிகம் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஹோட்டல் மேலாளர்

இதையும் படிங்க:நடுக்காடு...! மறித்து நின்ற யானை...! ஆம்புலன்சில் பிரசவம்..!

ABOUT THE AUTHOR

...view details