தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 21, 2019, 8:29 PM IST

ETV Bharat / state

'கொடுத்த கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை'

தூத்துக்குடி: ஏரல் அருகே கொடுத்த கடனை திருப்பி தராததால் இளைஞரை அடித்துக்கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடுத்தக்கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை
கொடுத்தக்கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 43). இவர் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சாகுல் ஹமீது கடனை திருப்பி கொடுக்காததால் கண்ணன் உள்பட ஆறு பேர் சேர்ந்து சாகுல்ஹமீதை கடந்த 14ஆம் தேதி காரில் கடத்திச் சென்று ஆழ்வார் திருநகரியில் கண்ணன் நடத்திவரும் மளிகைக் கடையின் பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அன்று மாலை சாகுல்ஹமீதை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த சாகுல்ஹமீதை உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏரல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (47) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் கண்ணன், அவரது கூட்டாளிகளான முத்துப்பாண்டி, ஜான், ஆறுமுகநயினார் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சாகுல் ஹமீது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது காவல் துறையினரிடம் சாகுல் ஹமீதை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை சாகுல் ஹமீது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போராட்டக்காரர்களை காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்திக்க வைத்து புகார் மனு அளிக்கச் செய்தனர்.

கொடுத்தக்கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உறவினர்கள், "சாகுல் ஹமீது உயிரிழப்புக்கு காரணமான ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம்" என்றனர்.

இதையும் படிங்க: கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி இளைஞர் மீது காவலர் தாக்குதல்!

ABOUT THE AUTHOR

...view details